×

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை ; தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை : கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றது இங்கிலாந்து அரசு!

லண்டன் : பிரிட்டனில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1.08 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.55 கோடியை தாண்டிவிட்டது. 24 மணி நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 359 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நடப்பில் உள்ள பெருந்தொற்று கட்டுபாடுகளை அகற்ற உள்ளதாக கூறினார். பிரிட்டனில் வரும் 27ம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் பொது இடங்களில் நடமாட தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வகுப்பறைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடும் உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

அத்துடன் அரசு இனிமேல் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி மக்களைக் கேட்காது என்றும் மக்கள் இப்பொது அலுவலகத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து தங்கள் முதலாளியிடம் பேச வேண்டும் என்றும் போரின் கூறினார். கூடுதல் தவணை தடுப்பூசி திட்டம் முழுவதும் பிரிட்டன் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து கட்டுப்பாடுகள் விளக்கி கொள்ளப்படுவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் பிரிட்டன் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வந்தாலும் தினசரி தொற்று குறையாத நிலையில், கட்டுப்பாடுகளை ஜான்சன் அரசு நீக்கியிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Tags : UK Government , பிரதமர் போரிஸ் ஜான்சன்
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...