சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: முதியவருக்கு வலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகே ஒரு தம்பதி வசிக்கின்றனர். கூலி தொழிலாளிகள். அவர்களுக்கு, 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், பெற்றோர் வேலைக்கு சென்றனர். சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்தாள். அந்த நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த பாபு (50) என்பவர் அங்கு சென்றார். அப்போது சிறுமியிடம், பனங்கிழக்கு வாங்கி தருவதாக கூறி அங்குள்ள புதருக்கு அழைத்து சென்றார். இதை, பார்த்த சிறுமியின் உறவினர், கிராம மக்களை அழைத்துக் கொண்டு புதருக்கு சென்றனர். அவர்களை கண்டதும், பாபு அங்கிருந்து தப்பிவிட்டாடர். சிறுமி, புதரில் இருந்து அழுது கொண்டு வெளியே வந்தாள்.

அப்போது சிறுமி, பாபு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, கதறி அழுதபடி  தனது உறவினரிடம் கூறினாள். இதைகேட்டு, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சிக்கு உள்ளான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: