காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் உணவூட்ட குறைபாடு குறித்த கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உணவூட்ட  குறைபாட்டால் ஏற்படும் நோய் தாக்கமும் என்ற கருத்தரங்கம் நடந்தது.  காஞ்சிபுரம் அடுத்த கிழம்பி ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சாா்பில் உடல்நலமும் உணவூட்ட  குறைபாட்டால் ஏற்படும் நோய் தாக்கமும் என்ற கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் பா.போஸ்  தலைமை வகித்தார்,  அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் மோகனரங்கன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உயிர் வேதியியல் துறை தலைவர் முனைவர் புண்ணியக்கோட்டி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன்  கருத்தரங்கின் நோக்கம் குறித்து விவரித்தார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ஆர்.எஸ்.வெங்கடேசன் கலந்து கொண்டு ``உடல்நலம் மற்றும் உணவூட்ட குறைப்பாடு நோய்களின் தாக்கம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கருத்தரங்கில் உடற்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் பிரகாஷ், துறை பேராசிரியர்கள் பாலு, ஆனந்தன், ஆறுமுகம், சித்திரிக்கா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: