எஸ்ஐயை வெட்டிய ரவுடி கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக அவரை பிடிக்க கும்மிடிப்பூண்டி சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், காவலர் விமல் ஆகியோர் சென்றனர். அப்போது அவரது உறவினர்கள் மற்றும் யுவராஜ், போலீசாரை தடுக்க முயன்றனர். அதில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், திடீரென கத்தியை எடுத்து எஸ்ஐ பாஸ்கரை வெட்டி விட்டு, காவலரை பல்லால் கடித்துவிட்டு தப்பினார்.

புகாரின்படி கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்த யுவராஜை, நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆத்துப்பக்கம் ஏரிக்கரையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார்,  அவர் மீது, 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: