போலீஸ் அனுமதி பெற்று ஓடிடியில் வெளியாகும் படம்

சென்னை: சென்சார் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே திரையரங்குகளில் படங்கள் ரிலீசாகின்றன. ஆனால், ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படும் பல படங்களுக்கு சென்சார் சான்றிதழ் இருப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான மலையாள படம், சுருளி. லிஜோ ஜோஸ் ெபல்லிசேரி இயக்கிய இப்படத்தில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பில் கண்டனக் குரல் எழுந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள  வார்த்தைகள் மிகவும் மோசமானவை என்று சொல்லி, படத்தின் இயக்குனர்  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை அதிகாரிகள் சிலர் சுருளி படத்தைப் பார்த்து தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓடிடியில் நிறுத்தப்பட்ட இந்த படம், மீண்டும் வெளியாகிறது.

Related Stories: