2021 ஐசிசி டி20 அணியில் ஒரு இந்திய வீரரும் இல்லை

துபாய்: ஐசிசி சார்பில் தேர்வு செய்யப்பட்ட கடந்த ஆண்டின் சிறந்த சர்வதேச டி20 அணியில், ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் பாபர் ஆஸம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு 29 டி20 போட்டியில் விளையாடி 939 ரன் குவித்தது (சராசரி 37.56, சதம் 1, அரை சதம் 9) குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டி20 அணி: ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் ஆஸம் (கேப்டன், பாகிஸ்தான்), எய்டன் மார்க்ரம் (தென் ஆப்.), மிட்செல் மார்ஷ் (ஆஸி.), டேவிட் மில்லர், டாப்ரைஸ் ஷம்ஸி (தென் ஆப்.), ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.), வனிந்து ஹசரங்கா (இலங்கை), முஸ்டாபிசுர் ரகுமான் (வங்கதேசம்), ஷாகீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்).

Related Stories: