மத்திய ஆசியா மாநாடு 27ம் தேதி மோடி உரை

புதுடெல்லி: வெளியுறவுத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பு: இந்திய - மத்திய ஆசிய முதல் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி ஜன.27ம் தேதி காணொலி மூலம் தொடங்கி நடத்துகிறார். இதில் கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாட்டு அதிபர்கள் பங்கேற்கிறார்கள். இதில், இந்திய-மத்திய ஆசிய உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள். பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள்.

Related Stories: