வானில் 3 ஆயிரம் அடி உயரத்தில் நேருக்கு நேர் பறந்த விமானங்கள்: 400 பயணிகள் உயிர் தப்பிய அதிர்ஷ்டம்

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா  சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து  வரும் விமானங்கள் தரையிறங்கவும். புறப்பட்டு செல்லவும் இருவேறு ஓடுபாதைகள் உள்ளன. இதில் ஒன்றில் விமானம்  தரையிறங்கினால், மற்றொன்றில் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்படும்.  ஆனால், சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர், கொல்கத்தாவுக்கு செல்வதற்கு 2  விமானங்கள் தயாராக இருந்தன. வரிசைப்படி விமானங்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் புறப்பட வேண்டும். ஆனால், சம்பவத்தன்று ஒரே நேரத்தில் 2 விமானங்களுக்கும் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நிமிடங்களில் 2 விமானங்களும் 3 ஆயிரம் அடி உயரத்தில் பாதை மாற தொடங்கின. அப்போது, அவை இரண்டும் நேர் பாதையில் பயணித்தன. இதை பார்த்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி அலறினார். உடனே, விமானி்களை தொடர்பு கொண்டு வெவ்வேறு திசையில் திருப்பும்படி கட்டளையிட்டார். அதன்படி, கொல்கத்தாவிமானம் இடது புறமும்,  புவனேஸ்வர் விமானம் வலது புறமாக திருப்பப்பட்டது. இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த குளறுபடி குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 2 விமானத்திலும் 400க்கும்  அதிகமான பயணிகள் இருந்தனர்.

Related Stories: