13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்: பிரதமர் மோடிக்கு தமிழ் எம்பி.க்கள் கடிதம்

கொழும்பு:  கடந்த 1987ம் ஆண்டு உருவான  இந்தியா- இலங்கை  ஒப்பந்தத்தின்படி இலங்கை இனப்பிரச்னையை தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது, அந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்பி.யுமான ஆர்.சம்பந்தன் தலைமையில் தமிழ் எம்பிக்கள் குழு கொழும்பில் உள்ள இந்திய துாதர் கோபால் பாக்லேயை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளனர். பிரதமர்  மோடிக்கு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் அவர்கள், ‘13வது திருத்த சட்டத்தின்படி தமிழர்களுக்கு உண்மையான  அதிகார பகிர்வுகளை அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பல இந்திய- இலங்கை தலைவர்கள் உறுதி அளித்திருந்தனர்.

தமிழ் மொழி பேசுபவர்கள், அவர்களுடைய வாழ்விடத்திலேயே அமைதி, சுயமரியாதை, பாதுகாப்புடனுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தி நீண்டகால தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண, இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி அழுத்தம் தர வேண்டும்,’ என கூறியுள்ளனர்.  இலங்கைக்கு ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் உதவி வழங்கப்படும் என கடந்த வாரம் இந்தியா அறிவித்திருந்த நிலையில், தமிழ் எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு இக்கடிதத்தை எழுதி உள்ளனர்.

Related Stories: