குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டிற்கான அலங்கார ஊர்தி அணிவகுப்பை ஒன்றிய அரசு நியமித்த 10 பேர் கொண்ட குழு நிராகரித்துள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, விளக்கங்கள் சொன்ன நிலையிலும், இந்த புறக்கணிப்பு, தமிழ்நாட்டின்மீதான அவமதிப்பு என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த எண்ணம் என்பதில் ஐயமே இல்லை. முதல்வர் உள்பட தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை ஒலிக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் அணிவகுக்கும் அந்த குடியரசு நாளன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி அலுவலகங்களின் வாயிலிலும், வீடுகளின் முன்பாகவும் தனி நபர் இடைவெளி விட்டு, அணிவகுத்து நின்று தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் கண்டனக் குரலை எழுப்பும் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறோம். இதில், சமூக அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும்கூட இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழ்நாட்டின் ஒத்தக் குரலை எழுப்புமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: