கள்ளக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி சந்தையில் 90 லட்ச ரூபாய்க்கு பருத்தி கொள்முதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி சந்தையில் 90 லட்ச ரூபாய்க்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பருத்தி வார சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் 633 விவசாயிகள் 3012 பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் திருப்பூர், சத்தியமங்கலம், விழுப்புரம், பண்ருட்டி, ஆத்தூர், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தி முட்டைகளில் ஏலத்தில் எடுத்து சென்றனர்.

ஒட்டு ரக பருத்தி ஒரு குவின்டால் குறைந்தபட்சம் 3569 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 5,789 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. எல்ஆர் ஏ பருத்தி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் 8119 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 10,036 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று ஒரே நாளில் 3012 பஞ்சு முட்டையில் மொத்தம் 90 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்தார்.

Related Stories: