உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு ஊர்களில் பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியது.

வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் விருந்தளித்தார். பிறகு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இப்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: