2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே பதிலடி

பல்லேகலே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. பல்லேகலேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக  நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன் எடுத்தது. கேப்டன் கிரேக் எர்வின் 91, சிக்கந்தர் ரசா 56(46பந்து), சீன் வில்லியம்ஸ்48 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்களே எடுத்தது. இதனால் 22 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றிபெற்றது. இலங்கை கேப்டன் துசன் ஷனகா 102 (94பந்து), ரன் எடுத்தார். எர்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-1 என சமனில் உள்ள நிலையில் கடைசி போட்டி 21ம் தேதி நடக்கிறது.

Related Stories: