குடியாத்தம் நகரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.221.03 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: குடியாத்தம் நகரில் புறவழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு ரூ.221.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். குடியாத்தம் நகரைச்சுற்றி 9 கி.மீ. தொலைவுக்கு  புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்படும் புறவழிச்சாலை குடியாத்தம் நகரை மங்களூரு - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: