கேரளாவில் நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் திலீப்பின் நண்பர் தலைமறைவானார்: போலீசாரை கொல்ல சதித்திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்து ஐந்து வருடத்துக்கு முன் பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை சூடுபிடித்து உள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரும் டைரக்டருமான பாலச்சந்திரகுமார், திலீப்புக்கு எதிராக போலீசிலும் நீதிமன்றத்திலும் தெரிவித்த சில முக்கிய விவரங்கள்தான் இதற்கு காரணமாகும். நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் திலீப்பிடம் இருப்பதாகவும் இவ்வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல திலீப்புடன் சேர்ந்து அவரது நெருங்கிய நண்பர்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும் பாலசந்திரகுமார் கூறினார்.

இதையடுத்து கொச்சி குற்றப்பிரிவு போலீசார் நடிகர் திலீப், அவரது தம்பி அனூப் மற்றும் திலீப்பின் தங்கையின் கணவர் சூரஜ், உறவினர் அப்பு, நெருங்கிய நண்பரும் ஓட்டல் பங்குதாரருமான சரத் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சரத், திலீபின் தங்கையின் கணவர் சூரஜ் ஆகியோரின் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது வழக்குக்கு தேவையான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே போலீசாருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய சம்பவத்தில் சரத்துக்கு மிக முக்கிய பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தேடியபோது  சரத் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சரத்தை பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திலீபுடன் சேர்ந்து சரத்தும் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: