கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சாமநத்தம் கிராமத்தில் மண் சரிந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோல மண் எடுக்கும் போது மண் சரிந்ததில் லட்சுமி (28), ராதா (26) ஆகியோர் மண்ணில் புதைத்து பலியாகினர். மண் சரிவில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 2 பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: