சென்னை தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பில் ஜெயக்குமார் என்பவரின் இல்லத்தில் கழிவுநீரானது அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொட்டியினை சுத்தம் செய்வதற்காக இன்று காலை ராஜேஷ், ஏழுமலை என்ற இருவர் பணிக்கு வந்துள்ளனர். இருவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். உள்ளே இறங்கிய சில நிமிடங்களில் அவர்கள் விஷவாயு தாக்கி மயங்கியுள்ளனர். மயங்கிய உடனேயே அருகில் இருப்பவர்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும் மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிமங்கலம் போலீசாரும் தாம்பரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டுள்ளனர். அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். விஷவாயு தாக்கிய சிறிது மணித்துளிகளில் அவர்கள் உயிரானது பிரிந்துள்ளது. இருவரது உடல்களும் தாம்பரம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: