×

15-18 வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

டெல்லி :இந்தியாவில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.தனையடுத்து நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி கடந்த 3ம் தேதி முதல் தொடங்கியது.

இந்த நிலையில், 15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு இது மிகப்பெரிய நாள்! 15-18 வயதுக்குட்பட்ட இளையவர்களில் 50% க்கும் அதிகமானோர் #COVID19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.நல்லது, என் இளம் நண்பர்களே!தடுப்பூசி போடுவதற்கான உங்கள் உற்சாகம், இந்திய மக்களை ஊக்குவிக்கிறது., என்று தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில்  15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“இளைய மற்றும் இளமைத்தன்மையுள்ள இந்தியா வழிகாட்டுகிறது!

இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை தொடர்ந்து நாம் பராமரிப்போம்.

தடுப்பூசி செலுத்துவதும், கோவிட்-19 தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிப்பதும் முக்கியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவோம்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi , கொரோனா,இந்தியா,பிரதமர் ,நரேந்திர மோடி ,பாராட்டு
× RELATED தெலங்கானாவில் விரைவில் அரசியல்...