தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோயிலில் பக்தர் மீது மிளகாய்பொடி அபிஷேகம்

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி கடந்த 9ம் தேதி  கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மூலவர் தண்டாயுதபாணிக்கு தினமும் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது நேற்று நடந்த தைப்பூச விழாவில் மூலவர் தண்டாயுதபாணிக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து  காவடி பூஜைகளும், வீதியுலாவும், பிற்பகலில் முருகபெருமானுக்கு பால் அபிஷேகமும் அருட்பெருஞ்ஜோதி சுவாமி மார்பு மீது மாவு இடித்தலும், மிளகாய் பொடி அபிஷேகமும் நடந்தது.

இதையடுத்து மாலை பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செடல் சுற்றினர். தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்தும், வேல் அணிந்தும், தீமிதித்தும் முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் செடல் அணிந்து ஆட்டோ கார், வேன், லாரி, தேர்களை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர.  இதில் தேவதானம் பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: