காய்கறி வியாபாரிகளிடம் ரூ.2 கோடி மோசடி!: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு அதிமுக பிரமுகர் கைது..!!

விழுப்புரம்: காய்கறி வியாபாரிகளிடம் ரூ.2 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். திண்டிவனத்தில் பதுங்கி இருந்த ஈரோட்டைச் சேர்ந்த முருகேசரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பழனிசாமி உட்பட சக பேர், வீட்டுமனை வாங்கி தருவதாக 2 கோடி ரூபாய் வரை வியாபாரிகளிடம் பெற்றனர். வீட்டு மனை வழங்கவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை என்று காய்கறி சங்க வியாபாரி அய்யந்துரை புகார் அளித்திருந்தார்.

Related Stories: