×

ஊத்தங்கரை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

சூளகிரி : சூளகிரி அருகே திருமலை கவணிகோட்டாவில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதனை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழாக்கள் நடந்து வருகிறது. நேற்று சூளகிரி அருகேயுள்ள திருமலை கவணிகோட்டாவில், எருதுவிடும் விழா நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் எருது விடும் விழா தொடங்கியது.

இதில் பாத்தகோட்டா, காமன்தொட்டி, பீர்ஜேப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, சானமாவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் 300 எருதுகள் அவிழ்த்து விடப்பட்டது. விழாவை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். இதையொட்டி உத்தனப்பள்ளி, சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு எருதுகட்டு விழா நடைபெற்றது. விழாவில் எருதுகளை உறிபொம்மையை காட்டி உசுப்பேற்றி இளைஞர்கள் விரட்டி சென்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டு வரப்பட்டது. இதில் பெரியதள்ளபாடி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி, சின்னகண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Uthangarai , Choolagiri: A bullfighting ceremony was held at Thirumalai Kavanikotta near Choolagiri yesterday. To see this, the surrounding 5
× RELATED ₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது