கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

கோவா: கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி  கட்சியின் முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காணத் தயாராகி வருகின்றன.

Related Stories: