பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலை தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோல் தவறுகள் நடக்காமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னாள் தலைமை செயலர் - TNPSC - பொதுப்பணித்துறை அதிகாரிகள் 9 பேர் மன்னிப்பு கேட்ட நிலையில் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மார்க், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காததால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related Stories: