நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆலோசிக்கப்படுகிறது. ஆலோசனையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கேட்டறிகிறார். கொரோனா பரவலால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எத்தனை கட்டமாக நடத்தலாம் எனவும் ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories: