வள்ளலார் நினைவுநாளில் அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: வள்ளலார் நினைவுநாளில் அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு: வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: