ஒரே நாளில் 2 இடங்களில் வேட்டை சட்டீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 5 நக்சல்கள் பலி

சுக்மா: சட்டீஸ்கரில் நேற்று நடத்தப்பட்ட 2 வெவ்வேறு தாக்குதல்களில் 2 பெண்கள் உட்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுக்மா, தண்டேவாடா மற்றும் பாஸ்டர் மாவட்ட ரிசர்வ் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்ததோடு, போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் நக்சல் முன்னி சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லைப் பகுதியில் சீமால்தோடி கிராமம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. நக்சல் திடீரென தாக்குதல் நடத்தியதை அடுத்து போலீசார் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பெண் நக்சல் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இதில், வீரர் ஒருவரும் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: