சில்லி பாயின்ட்...

* புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணி 32-29 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஷ்வின், சாஹல் என 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

* ஐபிஎல் 2022 சீசனில் களமிறங்க உள்ள லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோரும் அந்த அணியில் இடம் பெற உள்ளனர்.

* ஆஷஸ் தொடரில் 0-4 என பரிதாபமாக தோற்ற இங்கிலாந்து அணி வீரர்கள், தொடர் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஓட்டலில் மது அருந்தி ‘பார்ட்டி’யில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியஅகி சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

* மஸ்கட்டில் நாளை தொடங்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 தொடரில், ‘இந்தியன் மகாராஜா’ அணி அதிரடி வீரர் வீரேந்திர சேவக் தலைமையில் களமிறங்குகிறது. ஆசியா லயன்ஸ் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்), உலக ஜயன்ட்ஸ் அணி கேப்டனாக டேரன் சம்மி நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தொடர் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பாக உள்ளது.

* ஸ்பெயினில் நடக்கும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று ஸ்பெயின் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: