அல்லு அர்ஜுன் போட்டோவுடன் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு

ஐதராபாத்: அல்லு அர்ஜுனின் புகைப்படத்துடன், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் பைக் ஓட்டியபடி சில காட்சிகளில் நடித்திருப்பார். அந்த பைக் ஓட்டும் புகைப்படத்தை எடுத்து, அவர் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவது போல் உருவாக்கியுள்ளனர், ஐதராபாத் போக்குவரத்து போலீசார். ‘நமது பாதுகாப்புக்கு ஹெல்மெட் அணிவது அவசியம்’ என்ற வாசகத்துடன் அல்லு அர்ஜுனின் இந்த புகைப்படத்தை வைத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். டிவிட்டரிலும் இதை வெளியிட்டுள்ளனர். இந்த விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: