×

காணாமல் போன பிரபல நடிகை சாக்குமூட்டையில் பிணமாக மீட்பு

டாக்கா: காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பிரபல வங்காளதேச நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, கெரனிகஞ்ச் பகுதியில் சாக்குமூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வங்காள தேசத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் ரைமா இஸ்லாம் ஷிமு (45). கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர், பார்டமன் என்ற படத்தில் அறிமுகமானார். 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், டி.வி நாடகங்களிலும் நடித்துள்ளார். தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார். பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட ரைமா இஸ்லாம் ஷிமு, நேற்று முன்தினம் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டைக்குள் பிணமாக கண்டுடெக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர்வாசிகள் சிலர் தகவல் கொடுத்ததை தொடர்ந்து, கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தின் குழு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நடிகையின் சடலத்தை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து ரைமா இஸ்லாம் ஷிமுவின் மரணம் தொடர்பான விசாரணைக்காக அவரது கணவர் மற்றும் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரைமா இஸ்லாம் ஷிமுவின் கணவர், கடந்த ஞாயிறு அன்று தனது மனைவியை காணவில்லை என்று கலாபகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


Tags : Recovery of body of missing famous actress in sack
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...