வாலிபர் வீடு சூறை வீட்டில் நுழைந்து சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் நிறுவன ஊழியர் கைது; 13 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, சதீஷ்குமார் காதலித்துள்ளார். நேற்று முன்தினம் சதீஷ்குமார், மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், அவரது தாயும் அலறி கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், 2 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார். மாணவியிடம் சதீஷ்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டதை அறிந்ததும், அவரது உறவினர்கள், சதிஷ்குமார் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், சதீஷ்குமாரின் அத்தை புஷ்பா (62) என்பவரையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த புஷ்பாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, மாணவியின் தாய், வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், போக்சோ சட்டத்தில் சதீஷ்குமாரை கைது செய்து, பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புஷ்பா கொடுத்த புகாரின் பேரில், சதீஷ்குமாரின் வீட்டில் தாக்குதல் நடத்திய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: