பாஜ அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 72வது குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் மத்திய பாஜ அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வி.சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் துரைராஜ், லோகநாதன், ராபின், வரதராஜ், சீனிவாசன், போஸ், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு வரும் 26ம் தேதி நடக்கும் 72வது குடியரசு தின ஊர்வலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், மருது சகோதரர்கள், வஊசி ஆகியோரின் படங்களுக்கு அனுமதி மறுக்கும் மத்திய பாஜ அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.

Related Stories: