திமுகவினருக்கு பொங்கல் பரிசு

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுகவில் உள்ள அனைத்து கிளை கட்சியினருக்கு, பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புளியங்குண்டா கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கினர். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ஜி.ரமேஷ், வி.ஜெகதீசன், ஏ.பி.செந்தில்குமார், த.ஜீவன், சாந்தி பன்னீர், நூருல்லா, வி.மனோகரன், வழக்கறிஞர் ஆர்.ராஜா, காஞ்சிபாடி சரவணன், செல்வம், வேழவேந்தன், ஊராட்சி மன்ற தலைவர் அருள்முருகன், சதீஷ், குணசேகர், சிவா, மணிகண்டன், புனிதா, டி.மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: