×

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம், செங்கல்பட்டு  மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட தலைவர் மகாலட்சுமி  தலைமையில் நடந்தது. மாநில துணைத் தலைவர்  அமுதவல்லி, மற்றும் மாநில பொருளாளர் மத்தேயு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய  மாவட்டத்திற்கு  உட்பட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு, வரும் 21ம் தேதி மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துதல், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், கடந்த 1ம் தேதி அன்றைய மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்து நிரப்புதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Tags : Tamil Nadu Primary School Teachers' Alliance , 17 Feature Attention Demonstration: Tamil Nadu Primary School Teachers' Alliance Announcement
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு