க்ரைம் நியூஸ்..........

எலக்ட்ரீஷியன் மர்மச்சாவு: குமரன் நகர் பாலாஜி நகர் மெயின் ரோடு பகுதியில்  மர்மமான முறையில் வாலிபர்  இறந்து கிடப்பதாக நேற்று திருவிக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதி ராஜாஜி தெரு பகுதியை சேர்ந்த செல்வம்(35) என்பதும், பெற்றோருடன் சண்டை போட்டு கோயம்பேட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி எலக்ட்ரீஷியன் வேலை பார்த்ததும் தெரியவந்தது. புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவா விற்ற இருவர் கைது: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியில் எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது, மாவா, ஜர்தா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்ற இந்திராணி(45) மற்றும் விமல்ராஜ்(39) ஆகியோரை கைது செய்தனர்.

கத்தியை காட்டி வழிப்பறி: புளியந்தோப்பு கன்னிகாபுரம் சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐசா(36). நேற்று முன்தினம் எம்கேபி நகர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நபர் மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்து சென்றார். புகாரின்படி எம்கேபி நகர் போலீசார் வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி விக்ரமை(36) கைது செய்தனர்.மாணவிக்கு பாலியல் தொல்லை: அரும்பாக்கத்தை சேர்ந்த 21 வயது பெண் அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், நெற்குன்றத்தில் மாணவனுக்கு மியூசிக் கற்றுக்கொடுத்து வருகிறார். நேற்று முன்தினம்  மாணவனுக்கு மியூசிக் சொல்லி கொடுத்துவிட்டு அங்கிருந்து இரவு அரும்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நடந்து வந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், மாணவி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம நபர் பைக்கில் ஏறி தப்பினார். புகாரின்பேரில், அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர் பைக் திருட்டு: தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட பெரியகுளத்தை சேர்ந்த மணிகண்டன்(34), புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (எ) குண்டு மணிகண்டன்(22), வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்த சுரேஷ் (எ) கெங்கையா(28) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.50 சவரன் மாயம்: வேப்பேரியை சேர்ந்தவர் மகிபால்(48). சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கி பார்த்தபோது தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 50 சவரன் காணாமல் போனது. புகாரின்படி பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: