தைப்பூச விழா: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருச்சி: முருக பெருமானுக்கு தைப்பூச விரதம், பங்குனி உத்திர விரதம், கந்தசஷ்டி விரதம், கார்த்திகை விரதம் போன்ற விரதங்கள் சிறப்பு வாய்ந்தது.  தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த பவுர்ணமி நாளில் முருகப்பெருமானுக்கு கொண்டாப்படும்  விழாவாகும். உமா தேவியார் கொடிய அரக்கன் தாரகன் என்பவனை கொன்று அழிக்க  முருகப் பெருமானுக்கு வெற்றிவேல்  வழங்கியது இந்த நாளில் தான். முருகனின் வெற்றியை போற்றும் விதமாக தைப்பூ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

இந்தாண்டு தைப்பூசத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்களின்றி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் முருகன் கோயில்கள் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். முருகனின்  4ம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  சுவாமிமலை சுவாமிநாத கோயிலில்  சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா, நண்பகலில் தீர்த்தவாரியும் நடந்தது.

பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் கோயில் நுழைவு வாயில்கள் முன் சூடும், விளக்கேற்றி பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். திருச்சி வயலூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதேபோல் ஜங்ஷனில் உள்ள வழிவிடுவேல்முருகன் கோயில், திருவானைக்காவல், மலைக்கோட்டைகளில் உள்ள முருகன் சுவாமி சன்னதிகள், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை எட்டுக்குடி முருகன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories: