2021 சிறந்த கால்பந்து வீரராக லெவன்டோவ்ஸ்கி தேர்வு

லண்டன்: 2021ம் ஆண்டுக்கான பிபா சிறந்த கால்பந்து வீரரராக போலந்தைச் சேர்ந்த ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றார். சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இறுதி பட்டியலில் நட்சத்திர வீரரான அர்ஜென்டினாவின் மெஸ்சி, எகிப்தின் முகமது சாலா ஆகியோர் இருந்த நிலையில் அவர்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாக்குகள் பெற்று லெவன்டோவ்ஸ்கி இந்த விருதை தக்கவைத்துள்ளார். இவர் இந்த விருதை வென்றது இது 2வது முறையாகும், கடந்த ஆண்டும் சிறந்த வீரராக தேர்வானார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பின் 2வது முறையாக இவர் இந்தவிருதை பெற்றுள்ளார். பார்சிலோனா கேப்டன் ஸ்பெயினின் அலெக்ஸியா புட்டெல்லாஸ் சிறந்த பெண் வீரருக்கான விருதைப் பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ பிபா சிறப்பு விருதை பெற்றார். அப்போது அவர் தனக்கு 37 வயதாகிவிட்டதாக ஓய்வு பற்றி சூசகமாக குறிப்பிட்டார். சிறந்த கோல் கீப்பராக செனகலை சேர்ந்த எட்வார்ட்மெண்டி, மகளிர் பிரிவில் சிலியின் எண்ட்லர் விருது பெற்றனர்.

Related Stories: