போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி கேமராக்கள் திருடிய 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புறக்காவல் நிலைய கண்ணாடியை உடைத்து சிசிடிவி கேமராக்களை திருடிய 4 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் உப்பு சங்கம் அருகே வடபாகம் காவல் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புறக்காவல் நிலைய கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 சிசிடிவி கேமராக்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் புறக்காவல் நிலையத்தை சேதப்படுத்தியதாக, தூத்துக்குடி முத்தரையர் காலனியை சேர்ந்த காளிமுத்து(21), தாளமுத்துநகரை சேர்ந்த சக்திவேல்(24), மாக்கான் என்ற முனீஸ்வரன்(24), முனீஸ்வரன்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 சிசிடிவி கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: