நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

விருதுநகர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி செல்ல வேண்டும்; அது அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். தமிழர்களின் பெருமையை பேசுவதில் பிரதமர் மோடியை போன்று வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை. குடியரசு தின அணிவகுப்பில் தமிழர் ஊர்தி செல்வது தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Related Stories: