மகாபலிபுரம் மாணவி பலாத்காரம்; வாலிபர் சிறையில் அடைப்பு: விடுதி வார்டன், ஹெச்.எம். கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் மகாபலிபுரம் அருகே உள்ள பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளிகள் செயல்படாததால், திருவண்ணாமலையில் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். கடந்த அக்டோபர் மாதம்தான் விடுதிக்குச் சென்றார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் 20 நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.வீடு வந்த அவர், திடீரென  எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக, அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சுய நினைவின்றி இருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் கார்த்திகா திருவண்ணாமலை மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த சிறுமிக்கு நினைவு திரும்பத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பேசும் திறன் வரவில்லை. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின்போது, தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் ஹரிபிரசாத் என மாணவி எழுதி காண்பித்துள்ளார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத்(31), என்பவர்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. கூலிதொழிலாளியான அவர் காதல் திருமணம் செய்துகொண்டு, திருவண்ணாமலை கரியான்செட்டி தெருவில் வசித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஹரிபிரசாத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் குழந்தைகள் நல ஆணையத்திற்கோ, போலீசாருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை என வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் செண்பகவள்ளி, உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.

Related Stories: