குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிராகரித்தது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க அலங்கார ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களை மாநில அரசுகளிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. தமிழக அலங்கார ஊர்தியில் வா.உ.சி மற்றும் வேலுநாச்சியாரின் உருவங்கள் இடம்பெற்றிருந்த சூழலில் தற்போது பாதுகாப்பு அமைச்சகம் அதனை ஏற்கனவே நீக்கியதற்கான காரணத்தை தமிழக அரசுக்கு தெரிவித்தாகிவிட்டது. தற்போது அதன் கோரிக்கையையும் நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெற கூடிய நிகழ்வானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆண்டில் தமிழ்நாட்டிற்கான ஊர்தியை ஏற்க பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்து கண்டனங்களை அடுத்து தற்போது அதற்கான கோரிக்கை தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கோரிக்கையையும் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட 25,000 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 8,000ஆக குறைக்கப்படுகிறது.

Related Stories: