ஒரு ஆலோசனையை ஏ டூ இசட் ஆராய்ந்து அரசுக்கு திட்டக்குழு வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஒரு ஆலோசனையை ஏ டூ இசட் ஆராய்ந்து அரசுக்கு திட்டக்குழு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை எழிலகத்தில் நடந்த மாநில திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தினார். மிக முக்கிய ஆலோசனையாக இருந்தால் முழுமையான பரிசீலனைக்கு பின் அரசுக்கு தெரிவிக்கலாம். உங்களுக்கு தோன்றும் புதிய எண்ணங்கள் குறித்து வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம்; துறைவாரியான வல்லுநர்களை சந்திக்கலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: