கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசி அதிகமானோர் எடுத்து கொண்டுள்ளதால், உயிரிழப்புகள் குறைந்த அளவில் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வாரம்தோறும் தற்பொழுது சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி  வழங்கப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் இனி வரும் வாரங்களில் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் அமைத்து செலுத்தப்படும் எனவும்,  அதேசமயம் வழக்கமாக நடக்கும் சனிக்கிழமை சிறப்பு முகாமும் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: