இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என எப்படி கூற முடியும்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என எப்படி கூற முடியும்? என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமுதாய உணவகங்களை அமைத்து பட்டினிச் சாவுகளை தடுக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். பட்டினிச் சாவுகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து தர ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

Related Stories: