தடுப்பூசி சான்றிதழை எதிர்க்கும் கட்டாயமாக்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு

டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என எந்த நிலையான வழிகாட்டு நெறிமுறையும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை வைத்திருப்பதிலிருந்து விலக்குக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரி இருப்பதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. யாருக்கும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக தடுப்பூசி செலுத்த முடியாது என கூறியுள்ள ஒன்றிய அரசு தடுப்பூசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: