சொல்லிட்டாங்க...

* டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள் ஊர்தி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது.  - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* நூல் விலை உயர்வு முக்கிய பிரச்னையாக உள்ளது. எல்லாவற்றையும் மத்திய அரசே செய்ய வேண்டும் என மாநில அரசு எதிர்பார்க்கக் கூடாது. - தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

* தென் மாநிலங்களில் பாஜ ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை அனுமதித்துவிட்டு, இதர மாநில ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது முறையற்றது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த குடியரசு நாள் அணிவகுப்புகள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: