நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்: 300 பேர் இணைந்தனர்

கூடுவாஞ்சேரி:  நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு  உட்பட்ட நந்திவரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் திடலில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், நகர பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, பொன்தசரதன், ஜெமினிஜெகன், மதன், கயிலை அன்பு, எ.ம்.கே.டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பி. சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாளை தொடங்கி வைத்தார். இதில், 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் புதிய உறுப்பினராக தங்களை சேர்த்துக்கொண்டனர். மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். முன்னாள் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் அப்துல்காதர், ரவி, மாசிலாமணி, சதீஷ்குமார், ஹரி, பிரகாஷ், ஏ.எஸ்.தரணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரூர் மாணவரணி அமைப்பாளர் எம்கேபி தினேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: