சிறப்பாக பணியாற்றும் குதிரைப்படையை சேர்ந்த 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு: கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதியும் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகர குதிரைப்படையில் சிறப்பாக பணியாற்றி வரும் 5  பெண் காவலர்களை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார். சென்னை குதிரைபடை தற்போது  27 குதிரைகளுடன் இயங்கி வருகிறது. இந்த 27 குதிரைகளும் காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிரிவிரில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 25 ஆண் காவலர்கள், 5 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். குதிரைகளை முறையாக பராமரித்து, குதிரைகள் மீது அமர்ந்து பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல் நிலை பெண் காலவர்களான ஜாஸ்மின், சுகன்யா, மாளவிகா, புனிதா, மஹாலட்சுமி ஆகிய 5  பெண் காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

2022ம் ஆண்டுக்கான 39வது அகில இந்திய காவல் குதிரைப்படை விளையாட்டு போட்டிக்கு குதிரையுடன் தீவிர பயிற்சியும் 5 பெண் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல், புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.52 ஆயிரம் பணத்தை மேற்கு வங்கத்தை சேர்ந்த மிதின் மொல்லா(33) என்பவர் எடுத்து தன்து நண்பர் உதவியுடன் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேர்மையாக செயல்பட்டு ரூ.52 ஆயிரம் பணத்தை காவல் நியைத்தில் ஒப்படைத்த வடமாநில வாலிபரை நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories: