தங்கப்பசை கடத்திய 3 பேர் கைது

சென்னை: இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், ஒரு குழுவாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் உள்ளாடைக்குள் 3 உருளைகளில் 852 கிராம் தங்கப்பசைகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.37.88 லட்சம். 3 பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: