குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி நீக்கத்துக்கு டிபென்ஸ் மினிஸ்டரி காரணம்: அண்ணாமலை பேட்டி

கரூர்: குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழக அரசு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ‘‘மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்’’ முடிவு என அண்ணாமலை தெரிவித்தார். கரூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் முக்கிய பிரச்னையாக இருப்பது குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் சென்றிருக்க கூடிய அணிவகுப்பு ஊர்தி ரிஜக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி எதிர்கட்சியை சேர்ந்த சிலர், குற்றசாட்டுக்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா அணி வகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அந்த மாநிலத்தை பிரதிபலிக்க கூடிய ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்கும். இது அனைத்து ஆட்சியிலும் மினிஸ்டரி ஆப் டிபென்ஸ் (ராணுவ அமைச்சகம்) நடத்துகின்ற நிகழ்ச்சி. எந்த மாநிலத்தில் இருந்து யார் பங்கேற்பது என்பதை கூட அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

இந்தாண்டு ஜனவரி 26ல் நடக்க கூடிய அணி வகுப்புக்காக 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ல் ராணுவ அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்தில் இருக்க கூடிய தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி, உங்கள் மாநிலத்தில் இருந்து பங்கேற்கிறீர்களா என செப்டம்பர் 27க்குள் சொல்லுங்கள் எனவும், அதன் பின்பு இரண்டாவது அக்டோபர் நடக்கும் மீட்டிங்கில் பங்கேற்று என்ன கான்செப்ட் என்பதை சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்து, 2014ல் இருந்து 7 ஆண்டுகளில் ஐந்து முறை தமிழகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது டிபென்ஸ் மினிஸ்டரி  முடிவு செய்வது. அந்த கமிட்டி அரசை சார்ந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: