முனைவர் படிப்பில் சேர கால அவகாசம்: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் கௌரி அனுப்பிய சுற்றறிக்கை: நடப்பு ஆண்டிற்கான முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தநிலையில், தற்போதைய கொரோனா பரவல் சூழல் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ம் தேதி வரை முனைவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: